Tasmak Shop Leave for 4 Days

Tasmak Shop Leave for 4 Daysநான்கு நாட்களுக்கு மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் வரும் 17, 18, 19 மற்றும் வாக்கும் எண்ணும் நாளான 22 ஆகிய 4 தினங்களில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.